Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th May 2023 22:22:27 Hours

இலங்கை கவச வாகன படையணி தலைமையகத்தில் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கு புதிய கட்டிடம் திறப்பு

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியும் இலங்கை கவச வாகனப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டீபிஎஸ்என் போதொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி, மற்றும் அவர்களின் அழைப்பின் பேரில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள், கொழும்பு 15, மட்டக்குலி இலங்கை கவச வாகன படையணி தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளின் உணவக திறப்பு வி்ழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

முதலாவது பொறியியல் சேவைகள் படையணி மற்றும், இலங்கை கவச வாகனப் படையணி படையினரால் நிர்மாணிக்கப்பட்ட விசாலமான உணவகம், தொலைக்காட்சி அறை சமையலறை, வரவேற்பு அறை மற்றும் விடுதி வசதிகள் ஆகியவற்றைக் கொண்ட இரண்டு மாடி கட்டிடம் மனிதவளம், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை பயண்படுத்தி நிர்மாணிக்கப்பட்டது.

இலங்கை கவச வாகனப் படையணியின் படைத்தளபதி மேஜர் ஜெனரல் டீபிஎஸ்என் போதொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி மற்றும் இலங்கை கவச வாகனப் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் பீஎன் விஜேசிறிவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆகியோர் இணைந்து நுழைவாயிலில் இராணுவத் தளபதியை வரவேற்றதுடன் இலங்கை கவச வாகனப் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, இராணுவத் தளபதி ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜென்களின் உணவகத்திற்கு சென்று, சிறப்புப் பதாதையை திரைநீக்கம் செய்ததுடன், செத்பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் நாடாவை வெட்டி திரந்துவைத்தார் இராணுவத் தளபதி அங்கிருந்த சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து கட்டிடத்தின் உட்புறத்தை உன்னிப்பாகப் பார்வையிட்டதுடன், இலங்கை கவச வாகனப் படையணியின் உறுப்பினர்களின் முயற்சிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியதையும் பாராட்டினார்.

அன்றைய பிரதம அதிதி தேனீர் விருந்துபசாரத்தின் போது அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் சுதந்திரமாக சில கருத்துக்களை பரிமாறிக்கொண்டதுடன், அங்கு தனது கடந்த கால நினைவுகளையும் நினைவு கூர்ந்தார்.

அடுத்து, இராணுவத் தளபதி குழுப்படங்கள் எடுக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதுடன், அதிகாரிகளின் உணவகத்திற்கு முன்பு மரக்கன்றினையும் நாட்டினார். பின்னர் படையினருக்கு உரையாற்றுவதற்கு முன்னர் இலங்கை கவச வாகன படையணியின் அதிதி பதிவேட்டு புத்தகத்தில் தனது கருத்துக்களை பதிவிட்டார்.

இராணுவத் தளபதி படையினருக்கு ஆற்றிய உரையின் போது, கவச வாகனப் படையணியின் குடும்பத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற போர் மாவீரர் லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ அவர்களின் நினைவுகளைப் புதுப்பித்துக்கொண்டதுடன், அனைத்து தரப்புகளும் மிக உயர்ந்த ஒழுக்கத்தை பேண வேண்டும் என்றும் கூறினார். அவரது உரையின் இறுதியில், இலங்கை கவச வாகனப் படையணியின் படைத் தளபதி, இராணுவத் தளபதிக்கு பாராட்டுச் சின்னமாக சிறப்பு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.

இராணுவத் தளபதி, இலங்கை கவச வாகன படையணியின் செயல்பாட்டுப் பணிகளின் போது பயன்படுத்துவதற்காக புதிதாக உருவாக்கப்பட்ட கண்ணிவெடி பாதுகாக்கப்பு வாகனத்தை (எம்ஆர்ஏபீ) இலங்கை கவச வாகனப் படையணியின் படைத் தளபதியிடம் ஒப்படைத்தார். இது இலங்கை மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படையினரால் வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் சிடீ வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இராணுவ பிரதி பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் டீஜிஎஸ் செனரத் யாப்பா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் படைத்தளபதி தளபதி, மேஜர் ஜெனரல் எஸ்பீஏஐஎம்பி சமரகோன் எச்டிஎம்சி எல்எஸ்சி, , இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பிரணாந்து டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ, 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூடபிள்யூஎச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ விஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ பீஎஸ்சீ, மின்சாரம் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் தளபதி மேஜர் ஜெனரல் ஜேஏஆர்எஸ்கே ஜயசேகர யூஎஸ்பீ பீஎஸ்சீ, மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.