12th June 2023 18:57:36 Hours
மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் எண்ணகருவிற்கமைய இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் தகுதியான ஒவ்வொரு சிப்பாய்க்கும் தனி வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. நடவடிக்கை மேற்கொண்டனர். அவ்வாறு நிர்மாணிக்கப்பட்ட வீடுகளின் திறப்பு விழாவின் பிரதம அதிதியான பதவி நிலை பிரதானி சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து பயனாளிகளுக்கு வீட்டுஅத்தியவசிய பொருட்களையும், அந்த வீடுகளை நிர்மாணித்த இலங்கை இலேசாயுத காலாட் படையினருக்கு சிறப்புப் பரிசுகளையும் அன்பளிப்புச் செய்தார்.
213 வது காலாட் பிரிகேட் தளபதி, இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிலையத் தளபதி, இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இவ்விரு விழாக்களிலும் பங்குபற்றினர். இலங்கை இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் மிகவும் தகுதியான இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் உறுப்பினர்களுக்காக அனைத்து அலகு மட்டங்களிலும் அதன் 'வீட்டுத் திட்டத்தை' விரிவுபடுத்துவதற்குத் தயாராகி வருகிறது, மேலும் இரண்டு புதிய வீடுகளை நிர்மாணித்து அதன் திறப்பு விழா வியாழக்கிழமை (ஜூன் 08) அனுராதபுரத்தில் இத் திட்டத்தின் காரணகர்த்தாவும் இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை இலேசாயுத காலாட் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
அந்த பயனாளிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கான சாவிகளின் மாதிரிகள் அன்றைய பிரதம அதிதியால் அடையாளமாக வழங்கப்பட்டன. அனைத்து இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் உறுப்பினர்களுக்கும் வீட்டை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியின் கருத்தின்படி ஒவ்வொரு பிரிவிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் வீரர்களுக்கான 'வீடு கட்டுமானத்தின்' மூன்றாம் கட்டத்தின் தொடர்ச்சியாக இந்தத் திட்டம் உள்ளது.
இதன்படி, லெப்டினன்ட் கேணல் என்ஐபீகே கமகே அவர்களின் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், 23 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய்களின் மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப திறன்களைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்ட ஒரு புதிய வீடு, அனுராதபுரம், நொச்சியாகமவில் வசிக்கும் 23 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தேவையற்ற அதிகாரவாணையற்ற அதிகாரி பெற்றுக்கொண்டார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகள்மார் மற்றும் ஒரு மகனும் உள்ளனர். மேலும், வெள்ளிக்கிழமை (9), 14 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரின் நிபுணத்துவத்துடன் வெலிஓயா, எத்தாவெட்டுனுவெவ பிரதேசத்தை சேர்ந்த திருமணமான 3 பிள்ளைகளின் தந்தையான இராணுவத்தில் 15 ஆண்டுகளுக்கு மேல் சேவை காலமுள்ள சிப்பாய் ஒருவருக்கு ஒரு வீட்டை நிர்மாணித்தனர். இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியும் பதி றிலைப் பிரதானியுமான மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ வீட்டை திறந்து வைத்தார்.
கட்டளை அதிகாரி மேஜர் கே பி அத்தநாயக்க அவர்களின் வழிகாட்டலின் பேரில் 14 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் புதிய வீட்டை நிர்மாணிப்பதற்காக அவர்களின் மனிதவளம், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை வழங்கினர். இதேவேளை, வியாழக்கிழமை (8) 14 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தில் சேவையாற்றும் அனுராதபுரம், மஹதங்கஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும் 5 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தகுதியான மற்றுமொரு ஒரு மகளின் தந்தையான அதிகாரவாணையற்ற அதிகாரிக்கு வீடு வழங்கப்பட்டது. கட்டளை அதிகாரி மேஜர் யுஎம்டிசி தர்மசிறி அவர்களின் பணிப்புரையின் பேரில் 5 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் புதிய வீட்டை நிர்மாணிப்பதற்காக தங்களின் மனிதவளம், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை வழங்கினர்.