Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th May 2024 21:53:02 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணி பயிற்சி பாடசாலையில் ஆட்சேர்ப்பு பாடநெறி 108 நிறைவு

பூஸ்ஸ இலங்கை இலேசாயுத காலாட் படையணி பயிற்சி பாடசாலையில் ஆட்சேர்ப்பு பாடநெறி - எண் 108 விடுகை அணிவகுப்புடன் 03 மே 2024 அன்று நிறைவடைந்தது.

இந் நிகழ்வில் இராணுவ உபகரண பணிப்பாளர் நாயகமும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜி.எம்.என். பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். ஆட்சேர்பு பாடநெறி எண் -108 இல் 108 சிப்பாய்கள் பயிற்சியை நிறைவு செய்தனர். 2023 ஒக்டோபர் 30 ம் திகதி தொடக்கம் 03 மே 2024 வரை பயிற்சி இடம்பெற்றது. பயிற்சியின் போது பயிற்சியாளர்கள் பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டதுடன் இறுதியாக கரகோசங்களுக்கு மத்தியில் தங்கள் திறமைகளையும் வெளிப்படுத்தினர். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என ஏராளமானோர் இந்த விடுக்கை அணிவகுப்பை கண்டுகளித்தனர்.

பிரதம அதிதி, பின்வரும் ஆட்சேர்பு மாணவர்களை விசேடமாகப் பாராட்டியதுடன், பாடநெறியின் போது அவர்கள் வெளிப்படுத்திய திறமைகளுக்காக வெற்றிக் கிண்ணங்களையும் வழங்கினார்.

தகுதி வரிசையில் முதலாம் இடம் – சிப்பாய் ஆர்என்சீஎஸ் ரத்நாயக்க

சிறந்த உடற் தகுதி – சிப்பாய் ஐஜீஐ பண்டார

சிறந்த துப்பாக்கி சுட்டுவீர் - சிப்பாய் எஸ்டி அபேசேகர