08th June 2023 20:21:39 Hours
இராணுவ பதவி நிலை பிரதானியும், இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தனுஷா வீரசூரிய மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் எம்பீஎஸ்பீ குலசேகர டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ அவர்களின் ஒத்துழைப்புடன் சனிக்கிழமை (ஜூன் 03) சில்வர் பகில்ஸ் சிற்றுண்டிச்சாலை வளாகத்தில் தானம் வழங்கப்பட்டது.
வெங்காய சம்பல் மற்றும் தேங்காய் சம்பலுடன் மரவல்லிக்கிழங்கு வழங்கப்பட்டதுடன், 3000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மாலை வரை இந்த தானம் வழங்கப்பட்டது. தானத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு சிரேஷ்ட அதிகாரிகள், இலேசாயுத காலாட் படையணியின் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், தங்கள் பங்களிப்பை வழங்கினர்.