Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th September 2024 22:12:24 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவினால் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய்க்கு புதிய வீடு

இலங்கை இலேசாயுத காலாட் படையணி படைத்தளபதியும் உபகரண பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஜிஎம்என் பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி வஜிர பெரேரா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் 2024 ஜூலை 06 ம் திகதி புதிய வீடமைப்பு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இத்திட்டம் இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் நிதி உதவியுடன் அந்தந்த படையலகுகளின் மனித வள ஆதரவில் 11 போர்வீரர்களுக்காக முன்னெடுக்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் முதற்கட்டமாக கோப்ரல் டி.எம்.க்கு ஜயதிலக அவர்களுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி கட்டளை அதிகாரி மற்றும் இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் சிரேஷ்ட உறுப்பினரினால் 2024 செப்டெம்பர் 8 அன்று பயனாளிக்கு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் 15 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.