Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th April 2025 11:37:56 Hours

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையரால் புத்தாண்டு பரிசில்கள் நன்கொடை

இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி தர்ஷனி யஹாம்பத் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, படையணி தலைமையகத்தில் 2025 ஏப்ரல் 11 ஆம் திகதி நன்கொடை வழங்கும் திட்டம் நடாத்தப்பட்டது.

இந்த நிகழ்வின் போது, இலங்கை இலேசாயுத காலாட் படையணி சேவை வனிதையர் பிரிவின் நலன்புரி திட்டங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவர்களின் மதிப்புமிக்க பங்களிப்புகளை அங்கீகரிக்கும் வகையில் பரிசில்கள் விநியோகிக்கப்பட்டன. மேலும், ஒரு சிவில் ஊழியரை ஆதரிக்கும் வகையில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் தற்போது தேசிய தொழில்நுட்ப டிப்ளோமா படித்துக் கொண்டிருக்கும் அவரது மகனுக்கு மடிக்கணினி நன்கொடையாக வழங்கப்பட்டது.