06th September 2023 18:52:37 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான வீட்டுத்திட்டத்தின் தொடர்ச்சியாக, தகுதியான இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய் ஒருவருக்கு வீட்டை நிர்மாணித்து, திங்கட்கிழமை (4) ரிக்கில்லகஸ்கடவில் வைத்து சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத்தளபதியும் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் முன்னாள் படைத் தளபதியின் கருத்தியல் கருத்துப்படி, ஒவ்வொரு படையலகு மட்டத்திலும் வீடற்ற சிப்பாய்களுக்கு வீட்டை நிர்மாணிக்கும் பொறுப்பை மூன்று கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் புதிய படைத் தளபதியான மேஜர் ஜெனரல் எஸ்ஆர்கே ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் வீரர்களின் முன்னேற்றத்திற்காக அதே திட்டத்தை சமமான ஆர்வத்துடன் நிலைநிறுத்துகிறார்.
அலவத்தேகம, ரிகில்லகஸ்கட என்ற இடத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு, 20 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தில் சேவையாற்றி வரும் 17 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரியான இரண்டு பிள்ளைகளின் தந்தைக்கு வழங்கப்பட்டது.
17 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எச்.ஜே.எம் பிரேமதிலக்க ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டலின் பேரில் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர்களால் தொழில்நுட்ப திறன்கள் வழங்கப்பட்டன. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பலர் பங்கேற்றனர்.