Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th May 2023 21:53:34 Hours

இலங்கை இலேசான காலாட் படையணியின் சிப்பாய்க்கு புதிய வீடு நிர்மாணிப்பு

இலங்கை இலேசான காலாட் படையணி தகுதியான தனது சிப்பாய் ஒருவருக்கு மேலும் ஒரு வீட்டை நிர்மாணித்து, வெள்ளிக்கிழமை (26) களுத்துறையில் நடைபெற்ற விழாவின் போது சம்பிரதாயமாக கையளித்தது.

இராணுவ பதவி நிலைப் பிரதானியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் ஆலோசனையின்படி, ஒவ்வொரு படையலகு மட்டத்திலும் வீடற்ற சிப்பாய் ஒருவருக்கு மூன்று கட்டங்களாக வீடு நிர்மாணிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

களுத்துறை, பண்டாரகமவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு, 17 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தில் சேவையாற்றும் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தகுதியான அதிகாரவணையற்ற அதிகாரிக்கு வழங்கப்பட்டது. அவர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் வசிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஐஏஎல் இலேபெரும அவர்களின் வழிகாட்டலின் பேரில் 8 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினர் புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கான அவர்களின் மனிதவளம், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப திறன்களை வழங்கினர்.

இராணுவ பதவி நிலைப் பிரதானியும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் சிடி வீரசூரிய ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் கருத்தியலுக்கமைவாக அனைத்து இலங்கை இலேசாயுத காலாட் படையணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களில் ஒருவருக்கு புதிய வீட்டை நிர்மாணிக்க தூண்டியது.

இலங்கை இலேசாயுத காலாட் படையணி தலைமையகத்தின் நிலையத் தளபதி கேணல் எம்பீஎஸ்பீ குலவேகர டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.