06th March 2024 18:37:45 Hours
இராணுவத் தடகளக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட 56 வது படையணிகளுக்கிடையிலான கயிறு இழுத்தல் போட்டி, 2024 பெப்ரவரி 28 முதல் 29 வரை ரசல் ஹை மைதானத்தில் பல்வேறு படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று எடைப் பிரிவுகளின் கீழ் 24 அணிகளின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் பரிசு வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இராணுவ தடகள குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் ஆர்ஏஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
போட்டியின் முடிவுகள் பின்வருமாறு:
560 கிலோ ஆண்கள் முதலாம் இடம் - இலங்கை பீரங்கி படையணி
560 கிலோ ஆண்கள் இரண்டாம் இடம் – இலங்கை இலேசாயுத காலாட்படை படையணி
560 கிலோ ஆண்கள் மூன்றாம் இடம் – கெமுனு ஹேவா படையணி
640 கிலோ ஆண்கள் முதலாம் இடம் – இலங்கை பீரங்கி படையணி
640 கிலோ ஆண்கள் இரண்டாம் இடம் – இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி
640 கிலோ ஆண்கள் மூன்றாம் இடம் – இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி
560 கிலோ பெண்கள் முதலாம் இடம் – இலங்கை இராணுவ மகளிர் படையணி
560 கிலோ பெண்கள் இரண்டாம் இடம் – இலங்கை இராணுவ பொது சேவை படையணி
560 கிலோ பெண்கள் மூன்றாம் இடம் – இலங்கை சமிக்ஞை படையணி