Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th October 2024 16:41:53 Hours

இலங்கை இராணுவத்தினால் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டல் மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் பணிப்புரைக்கு அமைய நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இராணுவத்தினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஆறுகள் நிரம்பி வழிவதால் நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் தேவையான நிவாரணம் மற்றும் உதவிகளை வழங்குவதற்கான உடனடி நடவடிக்கையை மேற்கொள்கின்றனர். நிவாரணப் பணிகளை மேலும் விரிவுபடுத்துவதற்கும், மேலதிக படையினரை நிலைநிறுத்துவதற்கும் இராணுவத் தளபதி முதலாம் படை தளபதி மற்றும் அனைத்து பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

அதற்கமைய பின்வரும் பிரதேசங்களில் நிவாரணப் பணிகளுக்காக படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

அ. மல்வான - இராணுவக் குழு (படகுடன்)

ஆ. கட்டுகொட - இராணுவக் குழு

இ. வட்டரெக்க - இராணுவக் குழு (படகுடன்)

ஈ. சீதாவாக்கை - இராணுவக் குழு

உ. மீதொட்டமுல்ல - இரண்டு இராணுவ குழுக்கள் (நான்கு யூனி பபல் வாகனங்களுடன்)

ஊ. கொலன்னாவ - இராணுவக் குழுக்கள் (இரண்டு அயர்ன்ஹோஸ்கள்)

எ. நவகமுவ - இராணுவக் குழு (இரண்டு படகுகளுடன்)

ஏ. பெலவத்த - இராணுவக் குழு (யூனி பபல் வாகனத்துடன்)

ஐ. யட்டதொலவத்த - இராணுவக் குழு (யுனிபல் வாகனத்துடன்)

மேலும், கொழும்பு, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி, அம்பாந்தோட்டை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அவசர தேவைகளுக்கு 23 டபிள்யூஎம்இசட் வாகனங்கள், 34 யுனிப்பல் வாகனங்கள் மற்றும் யுனிகோன் வாகனங்கள் மற்றும் 56 படகுகளுடன் 6,500 படையினர் தயார் நிலையில் உள்ளனர்.