Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

14th July 2024 06:34:44 Hours

இலங்கை இராணுவத்தினரால் யால தேசிய பூங்கா வீதி புனரமைப்பு

நாட்டின் மிகப்பெரிய தேசிய காடுகளில் ஒன்றான யால தேசிய பூங்கா, 130,000 ஹெக்டேர் பரப்பளவில் பரந்துள்ளது. இது பொதுமக்களுக்கு அணுகக்கூடிய இரண்டு பிரதேசங்களை கொண்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் இறுதியில் எதிர்பாராத கனமழை காரணமாக, யால பூங்காவில் உள்ள வீதி அமைப்பை மீளமைக்க பாதுகாப்பு அமைச்சின் உதவியை வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் கோரினார். இதன்படி, இராணுவத் தளபதியின் அறிவுறுத்தலின் கீழ், இராணுவத்தின் இயந்திரங்கள் மற்றும் மனிதவள உதவிகள் பணிக்காக வழங்கப்பட்டன.

மத்திய பாதுகாப்புப் படை தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், மறுசீரமைப்பு பணிகள் 05 ஜனவரி 2024 அன்று தொடங்கி 19 ஜூன் 2024 அன்று முடிவடைந்தது. இராணுவம் மேற்கொண்ட இந்த திட்டம் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.