Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th October 2023 22:00:21 Hours

இலங்கை இராணுவத் தொண்டர் படையினருக்கு 'எரிக் எரிக்சன் மற்றும் வாழ்க்கை' தொடர்பான விரிவுரை

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ அவர்களின் வேண்டுகோளுக்மைய வாரந்தோறும் திட்டமிடப்பட்ட பயிற்சி நாள் திட்டத்தின் கீழ் "எரிக் எரிக்சன் மற்றும் வாழ்க்கை" என்ற தலைப்பில் புதன்கிழமை (செப்டெம்பர் 27) இலங்கை இராணுவத் தொண்டர் படையணி செயல்பாட்டு மண்டபத்தில் விரிவுரை நடைபெற்றது.

இந்த விரிவுரையை திருமதி பாக்யா அபேசிங்க அவர்கள் ஆற்றினார். அவர் அமெரிக்க உளவியல் சங்கத்தின் உறுப்பினராக இருப்பதுடன், உளவியல் மற்றும் ஆலோசனையில் முதுகலை படிப்பை முடித்துள்ள அவர் தற்போது சமூக நலன் சார்ந்த ஆலோசனை உளவியலாளராக பணிபுரிந்து வருகின்றார்.

சிறந்த உளவியலாளர் திரு. எரிக் எரிக்சன் அறிமுகப்படுத்திய கோட்பாட்டு மற்றும் நடைமுறை அணுகுமுறைகளின் அடிப்படையில் பல்வேறு திட்டங்களின் கீழ் கட்டமைக்கப்பட்ட சேவை செய்யும் உறுப்பினர்களின் ஆளுமை வளர்ச்சிக்காக இவ்விரிவுரை வழங்கப்பட்டது.

உளவியல் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் தொடர்பாக இனிமையான இசையுடன் இவ் விரிவுரை இடம்பெற்றது. இந்த விரிவுரை வெற்றிகரமான வாழ்க்கை தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் முக்கிய விடயங்களை கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்நிகழ்ச்சி நடைபெற்றதுடன், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் பல சிப்பாய்கள் இவ்விரிவுரையில் கலந்து கொண்டனர்.