12th July 2023 20:03:01 Hours
இலங்கை இராணுவத் தொண்டர் படையணித் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்யூஎம்என் மானகே டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு தகவல் விரிவுரை அமர்வு வெள்ளிக்கிழமை (ஜூலை 07) இலங்கை இராணுவத் தொண்டர் படையணித் தலைமையகத்தில் நடைபெற்றது.
"இளம் தலைமுறையின் கலாசார மற்றும் நடத்தை மாற்றங்கள் மற்றும் இராணுவத்தின் மீதான அதன் விளைவுகள்" என்ற தலைப்பில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த அமர்வில், சிறப்பு விருந்தினராக இலங்கை இராணுவத் தொண்டர் படையணித் தளபதி கலந்துகொண்டதுடன் , சிரேஷ்ட அறிஞர் திரு. தமித் பல்லேவத்த பிரதம விருந்தினராகவும் பேச்சாளராகவும் கலந்துகொண்டார்.
இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதித் தளபதி மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்நிகிழ்ச்சி நடாத்தப்பட்டது. நிகழ்ச்சி சம்பிரதாய நடவடிக்கைகள் நடைபெற்றதுடன், இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பயிற்சி பரிசோதகர் பிரிகேடியர் டபிள்யூஜிபீ சிசிர குமார ஆர்எஸ்பீ அவர்களால் வரவேற்புரை வழங்கப்பட்டது.
விருந்தினர் பேச்சாளர் திரு. தமித் பல்லேவத்த அவர்கள் தனது உரையில் தெரிவு செய்யப்பட்ட கருப்பொருளுடன் தொடர்புடைய சூழலுக்குப் பொருந்தக்கூடிய சில பயிற்சிக்குத் தகுதியான முன்னோக்குகளை முன்வைத்தார்,
இச் செயலமர்வு கேள்வி-பதில் அடிப்படையில் தொடர்ந்ததுடன் பங்கேற்பாளர்களின் பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் குறித்து தங்கள் எல்லைகளை விரிவுபடுத்த முடிந்தது. இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையக தளபதியினால் விரிவுரையாளருக்கு பாராட்டுச் சின்னமாக நினைவுச் சின்னம் வழங்கப்பட்டதுடன் மற்றும் நன்றியுரையை இலங்கை இராணுவத் தொண்டர் படையணி கேணல் பயிற்சி கேணல் டிஎஸ்பிஆர் பெர்னாண்டோ அவர்கள் ஆற்றினார்.
இந் நிகழ்வில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி முதன்மை பணிநிலை அதிகாரி, பிரிகேடியர் நிர்வாகம் , சிரேஷ்ட அதிகாரிகள், இலங்கை இராணுவத் தொண்டர் படையணி அதிகாரிகள் மற்றும் அழைப்பாளர்கள் பங்குபற்றினர்,