Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th July 2023 19:19:38 Hours

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கு விரிவுரை

தொண்டர் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) இலங்கை இராணுவத் தொண்டர் படையணியில் வாழ்க்கை தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பது' மற்றும் 'நேர்மறையான எண்ணங்கள் மற்றும் திட்டங்கள்' என்ற தலைப்பிலான விரிவுரை நடாத்தப்பட்டது.

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்யுஎம்என் மானகே டபிள்யுடபிள்யுவி ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்களினால் இந்த விரிவுரை ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதியான மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ அவர்களால் மேற்பார்வை செய்யப்பட்டது.

இந் நிகழ்வின் கெளரவ அதிதியாக கலாநிதி ரங்க கலன்சூரிய அவர்கள் கலந்து கொண்டதுடன், வருகை தந்த அதிதியை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதியவர்கள் மரியாதையுடன் வரவேற்றதை தொடர்ந்து, இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தலைமையகத்தின் அதிகாரவாணையற்ற அதிகாரி 1, எல்விஎஸ்எஸ் விஜேசுந்தர அவர்களால் வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டது.

வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர், மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய ஆலோசகர் (தகவல்) இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் போன்ற பல முக்கிய நியமனங்களை வகித்த பிரபல ஊடகவியலாளரான கலாநிதி ரங்க கலன்சூரிய அவர்களால் விரிவுரை நடத்தப்பட்டது.

இராணுவ வாழ்க்கை தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது’, ‘சமகால பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கான நேர்மறை எண்ணங்கள் மற்றும் திட்டங்கள்’ என்ற கருப்பொருளில் விளக்கக்காட்சிகளுடன் பார்வையாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

விரிவுரையின் முடிவில், பங்கேற்பாளர்கள் கேள்வி பதில் அமர்வின் போது கேள்விகள் மற்றும் விளக்கங்கள் மூலம் அதிதி பேச்சாளருடன் உரையாடும் வாய்ப்பைப் பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து, அதிகாரவாணையற்ற அதிகாரி 1 எச்எம்யுசி ஹேவநாயக்க அவர்களினால் நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், அதிதி பேச்சாளருக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

முதன்மை பணிநிலை அதிகாரி, பிரிகேடியர் நிர்வாகம், சிரேஷ்ட அதிகாரிகள், தற்போது இராணுவ தொண்டர் படையணியில் பணிபுரியும் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவத்தின் பல்வேறு ஸ்தாபனங்களிலிருந்து அழைக்கப்பட்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.