06th February 2024 11:23:06 Hours
இலங்கை இராணுவ வைத்திய படையணியின் 10 வது குழு தென் சூடான் ஐக்கிய நாட்டின் தரம் – 2 வைத்தியசாலையில் கடமைகளைப் பொறுப்பேற்க இன்று (06 பெப்ரவரி) அதிகாலை இலங்கையில் இருந்து புறப்பட்டது.
தென் சூடானுக்குச் செல்லும் 10 வது குழுவில் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் டிஎம்டிஜே திசாநாயக்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் 2 ம் கட்டளை அதிகாரி மேஜர் என்ஐ ரத்நாயக்க தலைமையில் 14 இராணுவ அதிகாரிகள், ஒரு கடற்படை அதிகாரி மற்றும் 49 சிப்பாய்கள் உள்ளடங்கலாக 64 இராணுவ வீரர்கள் உள்ளடங்குவர்.
இராணுவத் தளபதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இலங்கை இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பீஏசி பெர்னாண்டோ யூஎஸ்பீ மற்றும் வெளிநாட்டு நடவடிக்கைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜீஎல்எஸ்டபிள்யூ லியனகே யூஎஸ்பீ பீஎஸ்சீ, மருத்துவ சேவை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் கேஜீகேஎச் விஜேவர்தன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, இலங்கை இராணுவ மருத்துவ படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் டபிள்யூஎயூஎஸ் வனசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குழுவினரை வழியனுப்புவதில் கலந்துகொண்டனர்.