Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

22nd November 2023 23:17:31 Hours

இலங்கை இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் அபிமன்சல – 2 விஜயம்

இலங்கை இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவினரின் பங்கொல்ல அபிமன்சல – 2 க்கான விஜயம் இலங்கை இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவின் திருமதி எச் ஜி சுவர்ணலதா அவர்களின் மேற்பார்வையில் சனிக்கிழமை (நவம்பர்18) இடம்பெற்றது.

இந்த விஜயத்தின் போது, அபிமன்சல போர்வீரர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டதுடன் அவர்கள் அனைவருக்கும் உலர் உணவுகள் அடங்கிய பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டன.

இந்த விஜயத்தின் போது இலங்கை இராணுவ முன்னோடி படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி எச் ஜி சுவர்ணலதா மற்றும் சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.