Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

02nd October 2024 19:34:18 Hours

இலங்கை இராணுவ மருத்துவ படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவி கடமை பொறுப்பேற்பு

இலங்கை இராணுவ மருத்துவ படையணி சேவை வனிதையர் பிரிவின் புதிய தலைவியாக திருமதி கல்யாணி விஜேரத்ன அவர்கள் 27 செப்டம்பர் 2024 அன்று இலங்கை இராணுவ மருத்துவ படையணி தலைமையகத்தில் நடைபெற்ற விழாவின் போது பதவியேற்றார்.

மத அனுஷ்டானங்களைத் தொடர்ந்து, புதிய தலைவி புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில், உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ மருத்துவ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் புதிய தலைவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.