Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th April 2025 13:00:13 Hours

இலங்கை இராணுவ மருத்துவ படையணி சேவை வனிதையர் தேசிய இரத்த வங்கியுடன் இணைந்து இரத்த தான திட்டம் ஏற்பாடு

இலங்கை இராணுவ மருத்துவ படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி கல்யாணி விஜேரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், தேசிய இரத்த வங்கியுடன் இணைந்து, 2025 ஏப்ரல் 03 ஆம் திகதி நாரஹேன்பிட்டிய இராணுவ மருத்துவமனையில் இரத்த தான திட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.

மருத்துவமனையின் இரத்த குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்காக சுமார் 400 நன்கொடையாளர்கள் இரத்த தானம் செய்தனர். இலங்கை இராணுவ மருத்துவ படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.