Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th July 2024 19:51:16 Hours

இலங்கை இராணுவ மகளிர் படையணியின் பணிநிலை சார்ஜன் தில்ஹானி லேக்கம்கே அவர்களுக்கு பாராட்டு விழா

இலங்கை இராணுவ மகளிர் படையணியின் ஈட்டி எறிதல் வீராங்கனையான பணி நிலை சார்ஜன் தில்ஹானி லேக்கம்கே உலக தடகள தரவரிசையின் அடிப்படையில் 2024 இல் நடைபெறவிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்குபற்றுவதற்கான தகுதிப் இடத்தைப் பெற்றுள்ளார்.

அவரது சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில், 06 ஜூலை 2024 அன்று இலங்கை இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதன்போது 56 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ். கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் நாட்டிற்கும் இராணுவத்திற்கும் பெருமை சேர்த்த பணிநிலை சார்ஜன் தில்ஹானி லேக்கம்கே அவர்களின் சாதனைக்கு பாராட்டினை தெரிவித்துக் கொண்டார்.

இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உதுலா கஸ்தூரிமுதலி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், மற்றும் சிப்பாய்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்.