Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th September 2024 14:25:57 Hours

இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையரினால் இரத்த தான நிகழ்வு

56 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை இராணுவ மகளிர் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி. உதுலா கஸ்தூரிமுதலி அவர்களின் மேற்பார்வையின் கீழ் 2024 ஆகஸ்ட் 26 அன்று இராணுவ மகளிர் படையணி தலைமையகத்தில் 75 வது இராணுவ தினத்தினை முன்னிட்டு இரத்த தான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

நாரஹேன்பிட்டி மத்திய இரத்த வங்கியின் உதவியுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந் நிகழ்வில் மொத்தம் 50 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இரத்த தானம் செய்தனர்.