06th April 2023 08:40:25 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் கூடைப்பந்தாட்ட அணிக்கு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்யும் நிமித்தம் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட படையலகுகளுக்கிடையிலான கூடைப்பந்தாட்டப் போட்டி - 2023 வியாழக்கிழமை மார்ச் 30 இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் கூடைப் பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்றது.
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத்தளபதியும் முல்லைத்தீவு - முன்னரங்கு பராமரிப்பு பகுதியின் தளபதியுமான மேஜர் ஜெனரல் அனில் இளங்ககோன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் இப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
2023 ம் ஆண்டு மார்ச் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் தகுதிச் சுற்றுகள் நடைபெற்றன, மேலும் இறுதிப் போட்டி இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் "A" அணிக்கும் 1 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணிக்கும் இடையே நடைபெற்றதை தொடர்ந்து 1வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி கடுமையான மோதலுக்குப் பின்னர் சம்பியன்ஷிப்பை தனதாக்கி கொண்டது. போட்டி இறுதியில், பிரதம அதிதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளால் சாதனையாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படையினர் பெரும் திரலானோர் கலந்து கொண்டு போட்டியை பார்வையிட்டனர்.