21st May 2024 20:50:54 Hours
ஜப்பானில் நடைபெற்ற கோப் 2024 பரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி II கே.ஏ சமித துலான் பரா ஈட்டி எறிதல் எப்-44 பிரிவில் (தூரம் - 66.49 மீ) உலக சாதனை படைத்தார்.
அவர் பரா ஈட்டி எறிதல் நிகழ்வில் (எப்-44/எப்-64) வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன் அதே நேரத்தில் அவரது பிரதிநிதித்துவப் பிரிவில் (எப்-44) உலக சாதனை படைத்தார். கோப் 2024 பரா தடகள உலக சாம்பியன்ஷிப் 2024 மே 17 அன்று ஆரம்பமாகியதுடன் 2024 மே 25 அன்று நிறைவடைகின்றது.
(Photo Courtesy - paralympic.org)