28th June 2023 22:12:49 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் தலைமையகத்தின் 2ம் காலாண்டு அதிகாரிகள் பயிற்சி தினத்தில் 75க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அதிகாரிகளின் பங்கேற்புடன் வேரஹேர இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் ஜூன் 23 அன்று நடைப்பெற்றது.
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத்தளபதியும் ஒழுக்க பணிப்பாளர் நாயகம்முமான மேஜர் ஜெனரல் ஏசி ஏ டி சொய்சா யூஎஸ்பீ எச்டிஎம்சி எல்எஸ்சி அவர்கள் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு இணங்க பயிற்சி அமர்வு 3 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் உள்ள அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந் நிகழ்ச்சித் திட்டத்தில் உடல் பயிற்சி அமர்வுகளை உள்ளடக்கியதுடன் தனிப்பட்ட மற்றும் குழு விளக்கக்காட்சிகள் தொடர்ந்து இடம் பெற்றன. அந்த விளக்கக்காட்சிகள் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தின் அதிகாரிகளின் விளக்கக்காட்சி மற்றும் தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்டன.
மாலையில், படையணியின் அதிகாரிகள் உணவகத்தில் இரவு விருந்துபசாரம் இடம் பெற்றதுடன். உலகளாவிய ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தில் பட்டதாரியும், பொது சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கொள்கையில் நிபுணத்துவம் பெற்றவருமான திருமதி லக்ஷ்மி ஜயவர்தன அவர்கள் உணவருந்தும் உணவகத்தில் இராணுவ வீரர்களின் நல்வாழ்வுக்கான ‘ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தின் அடிப்படைகள்’ என்ற தலைப்பில் விரிவான விரிவுரையை நிகழ்த்தினார்.
இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத்தளபதி, இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பயிற்சி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.