05th July 2023 23:08:59 Hours
இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவினால் கொழும்பு இராணுவ வைத்தியசாலையுடன் இணைந்து இரத்த தானம் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) பொல்ஹெங்கொடவில் உள்ள இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் 7 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணி மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சிறப்பு புலனாய்வு பிரிவின் சேவை வனிதையர் பிரிவின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வின் போது அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.
இந் நிகழ்வில் இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியும் இலங்கை இராணுவ ஒழுக்கப் பராமரிப்பு பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஏசீஏ டி சொய்சா, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி பிரியந்திகா டி சொய்சா, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையக தளபதி நிலைய தளபதி பிரிகேடியர் ஏஎம்ஆர் அபேசிங்க, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.
இலங்கை இராணுவப் பொலிஸ் படையின் மத்திய கட்டளைத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் SLCMP - SVB உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.