Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th November 2024 22:52:07 Hours

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையரால் மிஹிந்து செத் மெதுரவில் நன்கொடை திட்டம்

இலங்கை இராணுவ பொலிஸ் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி மனிஷா கொத்தலாவல அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அத்திட்டிய மிஹிந்து செத் மெதுரவில், கொழும்பு ரொட்டரி கிளப் ஒப் த ரோயல் இன்ஸ்டிட்யூட்டின் பங்கேற்புடன் நன்கொடை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ரூ. 69,000.00 பெறுமதியான மருத்துவப் பொருட்கள் ரொட்டரி கழக மூலம் அந்த நலவிடுதியில் வசிக்கும் போர் வீரர்களுக்கு உதவுவதற்காக வழங்கப்பட்டன. நிகழ்வில் சிற்றுண்டி வழங்கப்பட்டதுடன், ரோட்டரி கழக கலிப்சோ இசைக்குழுவினரால் பொழுதுபோக்கு இசை நிகழ்ச்சியும் வழங்கப்பட்டது.