Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st January 2025 18:43:16 Hours

இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் முன்னாள் தலைவிக்கு பிரியாவிடை

இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள் இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் முன்னாள் தலைவி கலாநிதி திருமதி ஹிமாலி நியங்கொட அவர்களுக்கு 2025 ஜனவரி 10 அன்று அதிகாரிகள் உணவகத்தில் பிரியாவிடை வழங்கினர்.

கவர்ச்சிகரமான நடன நிகழ்ச்சிகளுடன் தொடர் நிகழ்வுகள் ஆரம்பமாகின. அதனைத் தொடர்ந்து சிறப்பு விளக்கக்காட்சியும் காட்சிப்படுத்தப்பட்டது. இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி சதுரானி ஒவிடிகல அவர்கள் நன்றியுரை வழங்கினார். மேலும் இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி துஷாரி அபேசிங்க அவர்கள் அவருக்கு நினைவு பரிசு ஒன்றை வழங்கினார்.

இந்த நிகழ்வில் இலங்கை இராணுவ பொது சேவை படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.