15th May 2024 18:32:21 Hours
தியகம பேஸ்போல் மைதானத்தில் 2024 மே 11 அன்று நடைபெற்ற தேசிய பேஸ்போல் சுப்பர் லீக் - 2024 இல் இலங்கை இராணுவ பேஸ்போல் அணி இலங்கை கடற்படை அணியை 4 க்கு 3 புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது.
2024 மார்ச் 09 ஆம் திகதி ஆரம்பமான இப் போட்டியில் 24 வது காலாட் படைப்பிரிவு தளபதியும் இராணுவ பேஸ்போல் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் டப்ளியூஎல்ஏசி பெரேரா ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இராணுவ அணி சிறப்பு மூன்று மாத பயிற்சியின் பின்னர் பங்கேற்றது.
இராணுவ அணி அபார வெற்றியினை பெற்றதுடன் பணிநிலை சார்ஜன் பீஎம்பிஐ கோசல போட்டியில் சிறந்த வீர்ருக்கான விருதினை பெற்றதுடன் கோப்ரல் எம்என் ஶ்ரீயரத்ன சிறந்த துடுப்பாட்டாளராக பிரகாசித்தார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இப் போட்டியை கண்டுகளித்தனர்.