Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st January 2024 20:02:48 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணியில் "உதார ஒப" நிகழ்ச்சி திட்டம்

இராணுவ வீரர்களின் ஆன்மீக, மன மற்றும் நம்பிக்கையான அணுகுமுறைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் கருத்திற்கமைய ஆர்யா அறக்கட்டளையின் அனுசரணையில் 'உதார ஒப' எனும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (ஜனவரி 19) இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தலைமையகத்தின் 'ரெண்டெஸ்வஸ் பெவிலியனில்' நடைபெற்றது.

இந் நிகழ்வில் ஆர்யா அறக்கட்டளையின் உறுப்பினர்கள் அன்புடன் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மறைந்த போர் வீரர்களின் மறைந்த கெப்டன் சாலிய அலெதெனிய பீடபிள்யூவீ அவர்களின் நினைவிடத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வின் ஆரம்பமாக மங்கல விளக்கேற்றி உயிர்நீத்த போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வின் போது, பிரபல ஊடகவியலாளரும், ஆர்யா அறக்கட்டளையின் தலைவருமான திரு.சரித் கிரியெல்ல, சிரேஷ்ட சட்டத்தரணி திரு.சஞ்சய ரணதுங்க, யோகா மாஸ்டர் அசேல குணரத்ன, பிரபல தாதி திருமதி.புஷ்ப ரம்யானி டி சொய்சா, மற்றும் பிரபல நடிகர் திரு.பாண்டு சமரசிங்க ஆகியோர் தேசத்தின் பாதுகாவலர்களாகப் படையினரின் பாத்திரங்களைப் பாராட்டி விரிவுரைகளை வழங்கினார்.

மேலும், சிரேஷ்ட இசைக்கலைஞர்களான திரு.ஜகத் விக்கிரமசிங்க மற்றும் திரு.இந்திரஜித் டொலமுல்ல, பாடகி திருமதி. ஹித்மி பங்கஜ, மற்றும் பிரபல நடிகர் திரு.சமி சேனாநாயக்க ஆகியோர் தேசபக்திப் பாடல்களைப் பாடி, கூட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் கௌரவத்தையும் பெருமையையும் சேர்த்தனர்.

ஆர்யா அறக்கட்டளையின் தேசிய அமைப்பாளரான திருமதி. சுனேத்ரா செனவிரத்ன நிறைவுரையாற்றினார், கலைத்துறையில் பங்களிப்பு வழங்கிய முழு குழுவிற்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார், மேலும் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மற்றும் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் ஏற்பாட்டுக் குழுவிற்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். .

இந்த நாளைக் குறிக்கும் வகையில், ஆர்யா அறக்கட்டளையினால் ரூ. 50,000.00 பெறுமதியான இலங்கை இராணுவத் தொண்டர் படையணி இலக்கியம் மற்றும் வரலாற்று புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன. இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி ஆர்யா அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு இலங்கை இராணுவத் தொண்டர் படையணிக்காக ஆற்றிய சேவைகளைப் பாராட்டி சிறப்பு நினைவுச் சின்னங்களை வழங்கினார்.

இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.