13th April 2025 19:03:56 Hours
இலங்கை இராணுவ தொண்டர் படையணி தலைமையகம், இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் கலாசார மற்றும் பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கு இணங்க புத்தாண்டு விழாவை 2025 ஏப்ரல் 09 ஆம் திகதி கொண்டாடியது.
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பதில் பிரதித் தளபதி பிரிகேடியர் பிஎம்ஆர்ஜே பண்டார அவர்களின் வருகையுடன், பாரம்பரிய கலாசார நிகழ்வுகள் நடைபெற்றது.
பின்னர், சிறப்பு விருந்தினர்களால் பாரம்பரிய மங்கள விளக்கேற்றலுடன், நிகழ்வுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியது.
இந்த விழாவின் போது, தலையணை சண்டை, பானை உடைத்தல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, பணிஸ் சாப்பிடுதல், பலூன் உடைத்தல், யானைக்கு கண் வைத்தல் மற்றும் பாரம்பரிய விளையாட்டுகள் இடம்பெற்றன.
புத்தாண்டு விழாவின் குறிப்பிடத்தக்க அம்சமான புத்தாண்டு அழகு ராஜா மற்றும் அழகு ராணி தேர்வுப் போட்டி, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் இளம் உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. விளையாட்டுகள் மற்றும் நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு புத்தாண்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தேநீர் விருந்துபசாரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.
பிரிகேடியர் ஏஎம்சீ அபேகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ, முதன்மை பணிநிலை அதிகாரி, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், சிவில் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.