21st November 2023 21:32:18 Hours
இலங்கை இராணுவத் தொண்டர் படையணி மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் செயற்படும் ‘விருசவிய’ காப்புறுதிப் தொடர்பான எதிர்வரும் ஆண்டுக்கான உடன்படிக்கை (செவ்வாய்கிழமை) 2023 நவம்பர் 14 அன்று இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைமை அலுவலகத்தில் கைச்சாத்திடப்பட்டது.
இந்த காப்புறுதி திட்டத்தில் வெளிநோயாளர் பிரிவு மருத்துவ சிகிச்சைகள், வதிவிட மருத்துவ சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள், இறப்பு, குழந்தை பிறப்பு போன்ற நலன்புரி நன்மைகளின் வகைப்படுத்தலை வழங்குகிறது. இலங்கை இராணுவத் தொண்டர் படையணி மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திற்கும் இடையில் நடைப்பெற்ற ஒப்பந்த கைசாத்திடலின் போது இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி, பிரதி தளபதி மேஜர் ஜெனரல் எம்டிகேஆர் சில்வா கேஎஸ்பீ, இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பிரிகேடியர் நிர்வாகம் பிரிகேடியர் பிஎம்ஆர்ஜே பண்டார மற்றும் காப்புறுதி கூட்டுத்தாபன் அதிகாரிகள் மற்றும்இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவருமான திரு. ரொனால்ட் சி பெரேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் கேணல் எல்.டபிள்யூ.ஏ.டி.எஸ் விக்கிரமசிங்க (கேணல் நலன்புரி மற்றும் மக்கள் தொடர்புகள்), திரு. சந்தன எல் அலுத்கம (பிரதம நிறைவேற்று அதிகாரி), திரு. மகேஷ் கமகே (மேலதிக பொது முகாமையாளர் - வர்த்தகம் மற்றும் சந்தைப்படுத்தல்) மற்றும் திரு. ரவி மெண்டிஸ் (பொதுத்துறை முகாமையாளர் பிரிவு) ஆகியோரும் கலந்துகொண்டனர்.