Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th August 2024 19:33:08 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணி படையணிகளுக்கு இடையிலான தடகளப் போட்டி

தியகம மகிந்த ராஜபக்ச விளையாட்டரங்கில் 26 ஆகஸ்ட் 2024 அன்று படையணிகளுக்கு இடையிலான தடகளப் சம்பியன்ஷிப் போட்டியை இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூஜீபீ சிசிர குமார ஆர்எஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

தொண்டர் படையணியின் 21 படையலகுகளை பிரதிநிதித்துவபடுத்தி 300க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுகளில் எதிர்கால வாய்புகளைக் கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 27 மற்றும் 28 ம் திகதிகளில் இடம்பெறும் தடகளப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். 28 ஆகஸ்ட் 2024 இல் திட்டமிடப்பட்டுள்ள நிறைவு நிகழ்வில் பிரதம அதிதியாக தொண்டர் படையணியின் தளபதி கலந்துகொள்வார்.

இந் நிகழ்வில் இலங்கை தடகளத்தின் சிரேஷ்ட பிரதித் தலைவர், இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொள்வர்.