07th September 2023 17:01:21 Hours
14 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவின் பரிசளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக தற்போது லெபனானில் உள்ள பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எ.எஸ்.எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களின் தலைமையிலான இலங்கை இராணுவத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் கபில சுசந்த ஜெயவீர அவர்களை லெபனானின் பெய்ரூட்டில் உள்ள தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் 5 செப்டம்பர் 2023 அன்று சந்தித்தனர்.
பொதுபணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்.ஜி.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சி.பீ விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ , வெளிநாட்டு நடவடிக்கை பணிப்பகத்தின் கேணல் வெளிநாட்டு நடவடிக்கைகள் கேணல் பீபீசீ பெரேரா பீஎஸ்சீ, 14 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவின் தளபதி லெப்டினன் கேணல் டி.பீ.எல்.டி களுஅக்கல மற்றும் 14 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழுவின் சில அதிகாரிகள் இலங்கைக்கான தூதுவரின் விஜயத்தில் இணைந்து கொண்டனர்.
பதக்கங்கள் வழங்குவதற்பு முன் லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் 14 வது இலங்கைப் பாதுகாப்பு படை குழுவின் லெபனான், கிரீன்ஹில், நகோராவில் 06 செப்டம்பர் மரியாதை அழைப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
லெப்டினன் கேணல் டி.பி.ஐ.டி களுஅக்கல மற்றும் 2ம் கட்டளை அதிகாரி மேஜர் டபிள்யூ.எம்.சி.கே வன்னிநாயக்க தலைமையில் 14 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு 2023 மார்ச் 2 லெபனானுக்கு புறப்பட்டது. இதில் 10 அதிகாரிகள் மற்றும் 115 சிப்பாய்களுடன் 4 மோப்ப நாய்களையும் கொண்டுள்ளது.