17th February 2025 10:22:57 Hours
மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் தலைமையில் மேஜர் ஜெனரல் கே.ஏ.டபிள்யூ.என்.எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ, பிரிகேடியர் எஸ்.ஏ ஹெட்டிகே ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஆகியோரை கொண்ட இலங்கை இராணுவ தூதுக்குழு 2025 பெப்ரவரி 10 ஆம் திகதி லெபனான் நகோராவில் உள்ள லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படை தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டு லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படையின் பிரதி தளபதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
மறுநாள், 2025 பெப்ரவரி 11 ஆம் திகதி தூதுக்குழுவினர் லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படையின் இலங்கைப் படை பாதுகாப்பு முகாமை பார்வையிட்டனர். இதன் போது, 15 வது இலங்கைப் படை பாதுகாப்பு குழுவின் கட்டளை அதிகாரி, லெப்டினன் கேணல் டி விதானகே ஆர்எஸ்பீ (விஜயபாகு காலாட் படையணி) அவர்கள் தூதுக்குழுவை அன்புடன் வரவேற்றார்.
இந்த விஜயத்தின் போது, தூதுக்குழுத் தலைவர் படையினருக்கு உரையாற்றியதுடன் அனைத்து அதிகாரிகள் மற்றும் படையினருடன் கலந்துரையாடினார். நகோராவின் லெபனான் ஐக்கிய நாடுகள் இடைக்காலப் படை தலைமையகத்தில் பாதுகாப்பு கடமைகளைச் செய்யும் போது காயமடைந்த இரண்டு வீரர்கள் தொடர்பாக கேட்டறிந்ததுடன் அவர்களுக்கு தனது அனுதாபத்தையும் தெரிவித்தார்.