03rd July 2024 13:37:16 Hours
இலங்கை இராணுவ சேவைப் படையணி தலைமையகத்தில் ‘சியவாச’ அலுவலக வளாகத்தின் மேல் தளம் 27 ஜூன் 2024 அன்று திறந்து வைக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தின் போர் கருவி பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏகே. ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
வருகை தந்த பிரதம அதிதி புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வளாகத்தின் பிரதான நுழைவாயிலில், நிலைய தளபதியால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து, பிரதம அதிதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டு, பின்னர் வண்ணமயமான வரவேற்புடன் ஊர்வலமாக ‘சியவாச’ அலுவலக வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மகாசங்கத்தினரின் செத்பிரித் பாராயணங்களுக்கு மத்தியில், பிரதம அதிதி புதிய கட்டிடத்திற்கான பதாகையை திரைநீக்கம் செய்து கட்டிடத்தை திறந்துவைத்தார். இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவியின் வழிகாட்டுதலின் கீழ் புதிய பிரதான நுழைவாயிலின் கட்டுமான பணிக்கு இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவினால் அனுசரணை வழங்கப்பட்டது.
திறப்பு நிகழ்வை முன்னிட்டு, பிரித் பாராயணம், தானம் என்பன வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.