Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd April 2024 13:20:59 Hours

இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையரால் மாற்றுத்திறனாளி பிள்ளைக்கு குளியலறை

இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் மேற்பார்வையின் கீழ், இலங்கை இராணுவ சேவைப் படையணியின் படையினர் 3 வது இலங்கை இராணுவ சேவைப் படையணியின் சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரி ஒருவரின் மாற்றுத்திறனாளி பிள்ளைக்கு, நிர்மாணித்த குளியலறையை 2024 மார்ச் 02 ஆம் திகதி கையளித்தனர்.

இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சாந்தி ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் முன்னாள் தலைவி திருமதி துஷாரி வணிகசேகர அவர்களின் நிதியுதவியில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இலங்கை இராணுவ சேவைப் படையணி சேவை வனிதையர் பிரிவின் உறுப்பினர்கள், பல சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.