Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th February 2025 16:03:52 Hours

இலங்கை இராணுவ சேவை படையணியின் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான அதிகாரிகள் பயிற்சி தினம்

2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான அதிகாரிகள் பயிற்சி தினம் போர் கருவிகள் பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ சேவை படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.கே. ராஜபக்ஷ ஆர்எஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2025 பெப்ரவரி 11 அன்று இலங்கை இராணுவ சேவை படையணியில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சி உடல் பயிற்சியுடன் ஆரம்பமாகியது, அதைத் தொடர்ந்து அதிகாரவணையற்ற அதிகாரி I கே.ஆர்.ஏ. செனவிரத்ன (ஓய்வு) அவர்களால் ‘அதிகாரிகள் ஒழுக்கம்’ குறித்த விருந்தினர் சொற்பொழிவு வழங்கப்பட்டது. கேணல் போர்கருவிகள் கேணல் வீ.டி வருஷவிதான ஏடீஓ அவர்களால் ‘மின்னணு அரசு கொள்முதல்’ நடைமுறை குறித்த விரிவுரையை நிகழ்த்தினார்.

புகழ்பெற்ற விரிவுரையாளரான திருமதி. அனோமா திசாநாயக்க அவர்களின் "மன அழுத்த முகாமை மற்றும் சமநிலையான வாழ்க்கை" என்ற தலைப்பில் அறிவுமிக்க சொற்பொழிவுடன் அன்றைய நடவடிக்கைகள் நிறைவடைந்தன. சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.