Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th April 2023 20:02:32 Hours

இலங்கை இராணுவ சிங்க படையணியின் கோப்ரல் குஜராத்தின் சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பு

15 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் கோப்ரல் எம்.டி.ஜி.எஸ் கருணாரத்ன அவர்கள் தேசிய சக்கர நாற்காலி கிரிக்கெட் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இந்தியா குஜராத்தில் நடைபெறவுள்ள 2023 - ஆண்டிற்கான ஆசிய சக்கர நாற்காலி கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டியில் பங்கேற்றார்.

இப் போட்டியானது 2023 மார்ச் 23 - 29 வரை நடைபெற்றது. மே 2009 க்கு முன்னர் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் பங்களிப்பு வழங்கிய கோப்ரல் எம்.டி.ஜி.எஸ் கருணாரத்ன அவர்கள் பலத்த காயங்களுக்கு உள்ளாகி அவர் மருத்துவ ஆலோசனைக்கமைய சக்கர நாற்காலியில் இருக்கின்றார்.

4 ஆசிய நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்ட இப் போட்டியில், சக்கர நாற்காலி துடுப்பாட்ட வீரர்களின் இலங்கை அணி இரண்டாம் இடத்தைப் பெற்றது. இவர் 2008 ஆண்டு பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, 2008 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் வெடிகுண்டுக்கு இலக்காகி தனது இரு கால்களையும் இழந்தார்.