23rd July 2023 16:41:46 Hours
இலங்கை இராணுவ கரப்பந்து அணி (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஜூலை 22 அன்று சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் சீஷெல்ஸின் கரப்பந்து அணியுடன் நட்புரீதியான போட்டியில் பங்குபற்றியது.
இச் சிநேகபூர்வ போட்டியில் இலங்கை இராணுவ ஆண்கள் கரப்பந்து அணி வெற்றியீட்டியது.
இலங்கை மற்றும் சர்வதேச போட்டிகளில் கரப்பந்து வீரர்களின் திறமைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை தேசிய கரப்பந்து சம்மேளனம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தது.
9 ஆண் மற்றும் பெண் கரப்பந்து அணிகள் ஜூலை 19-23 வரை சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நட்பு ரீதியிலான போட்டிகளில் மோதின.