Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th February 2024 16:21:42 Hours

இலங்கை இராணுவ கபடி அணி இரட்டை சம்பியன்ஷிப் சாதனை

2024 பெப்ரவரி 24 அன்று தபுத்தேகம மகாவலி மைதானத்தில் நடைபெற்ற 'தம்புத்தயங்கே கபடிப் போட்டி - 2024'ல் இராணுவ கபடி அணி வெற்றி பெற்றது. ஆரம்பப் போட்டிகளைத் தொடர்ந்து இலங்கை இராணுவ அணியும் இலங்கை விமானப்படை அணியும் இறுதிப் போட்டிக்கு முன்னேறின. பலத்த போட்டிக்கு பிறகு இராணுவ வீரர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.

அதே சமயம், 2024 பெப்ரவரி 21 அன்று மஹரகம தேசிய இளைஞர் மன்றத்தில் நடைபெற்ற 'விஷன் இன்டிபென்டன்ட் டொரெபி கபடி சாம்பியன்ஷிப் 2024'ல் இராணுவ கபடி அணி சாம்பியன் கோப்பையை வென்றது. இலங்கை கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் அணிகள் உட்பட நாடளாவிய ரீதியில் உள்ள பல்வேறு விளையாட்டுக் கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பதினொரு கபடி அணிகள் சம்பியன்ஷிப் போட்டியில் பங்குபற்றியிருந்தன.