24th November 2023 05:49:12 Hours
மாலியில் உள்ள 5 வது இலங்கை இராணுவ அமைதி காக்கும் படை குழு காவே சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியினை பங்களாதேஷ் அமைதி காக்கும் படையணியில் இருந்து ஏற்றுக்கொண்டது.
மாலியில் உள்ள ஐக்கிய நாடுகளின் பல பரிமானம் ஒருங்கிணைந்த நிலைப்படுத்தல் பணி (மினுஸ்மா) படைத் தலைமையகம் வழங்கிய வழிகாட்டுதல்களின்படி இலங்கை இராணுவ அமைதி காக்கும் படை குழு படையினர் 2023 நவம்பர் 15 அன்று முதல் 2023 டிசம்பர் 10 வரை தமது கடமைகளை தொடர்வர்.
இலங்கை இராணுவ அமைதி காக்கும் படை குழு தளபதி கேணல் டப்ளியு டப்ளியு என் பீ விக்ரமாராச்சி அவர்கள் காவே சர்வதேச விமான நிலையத்திற்கு சம்பிரதாய விஜயமொன்றை மேற்கொண்டதுடன் காவே சர்வதேச விமான நிலையத்தில் நிறுவப்பட்ட பாதுகாப்பு வலையமைப்புக்களையும் பாதிக்கப்படக்கூடிய இடங்களை முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டார்.