28th December 2023 21:26:03 Hours
இலங்கை இராணுவத்தின் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட உயர்தர பாடநெறி இல - 27 ஆனது 2023 நவம்பர் 27 அன்று குக்குலேகங்க இலங்கை அமைதி ஆதரவு நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தில் ஆரம்பிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 22) சுருக்கமான விழாவுடன் நிறைவு பெற்றது.
மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட பணிப்பகத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த பாடத்திட்டத்தில், முப்படைகளின் பிரதிநிதியாக இராணுவம் (24), கடற்படை (03) மற்றும் விமானப்படை (01) உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
பாடநெறியில் சிறந்த செயல்திறன் கொண்ட பங்கேற்பாளர்களாக முறையே சாஜென் ஆர்.எம்.பீ ரத்நாயக்க முதலாம் இடத்தையும், கோப்ரல் கே.எம்.ஜே பண்டார இரண்டாம் இடத்தையும், மற்றும் கோப்ரல் ஏ.ஜி.எஸ்.எஸ் விஜேகோன் 3 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.