05th August 2023 06:27:26 Hours
புத்தள இராணுவப் போர்க் கல்லூரியில் சிரேஷ்ட கட்டளைப் பாடநெறியை பின்பற்றும் 26 மாணவ அதிகாரிகள் குழு, அவர்களின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக சனிக்கிழமை (29 ஜூலை 2023) அம்பாறை போர்ப் பயிற்சிப் பாடசாலைக்கு விஜயத்தை மேற்கொண்டனர்.
போர்ப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களால் வரவேற்றதுடன் இராணுவ இறுதிச் சடங்கின் நடைமுறைகள், பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை நடத்துதல் மற்றும் அத்தகைய சந்தர்ப்பங்களுடன் தொடர்புடைய நிகழ்வுகளின் தொடர்பான நடைமுறைகள் விளக்ங்களைப் பார்வையிட்டனர்.
புத்தள போர் கல்லூரியின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் கேணல் டிடபிள்யூஜிடிஎம் அமரசிங்க ஆர்டபிள்யூபீ பீஎஸ்சீ மற்றும் போர்ப் பயிற்சிப் பாடசாலையின் 04 பயிற்றுவிப்பாளர்கள் இராணுவ அணிநடை மாதிரிகளில் ஈடுபட்டனர்.
வருகை தந்த மாணவர் அதிகாரிகள், போர்ப் பயிற்சிப் பாடசாலையின் தளபதி பிரிகேடியர் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களுக்கு பாராட்டு நினைவுச் சின்னம் வழங்கினர்.