11th July 2023 00:09:08 Hours
புத்தல இராணுவப் போர்க் கல்லூரியின் சிரேஷ்ட கட்டளைப் பாடநெறி - 08 இன் மாணவ அதிகாரிகளுக்கு, அவர்களின் பாடத்தொகுதியின் ஒரு பகுதியாக, திங்கட்கிழமை (ஜூலை 10) ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்திற்கு அந்தந்த கிளைகள் மற்றும் பணிப்பகங்களில் கடமைகள் தொடர்பான அடிப்படை அறிவைப் பெறுவதற்காக விஜயம் செய்தனர்.
சிரேஷ்ட கட்டளைப் பாடநெறி - 08 ஆனது இராணுவத்தின் பல்வேறு படைப்பிரிவுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 26 மாணவ அதிகாரிகளை உள்ளடக்கியது. இராணுவப் போர்க் கல்லூரியின் தளபதி பிரிகேடியர் யூகேடிடிபீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, இராணுவப் போர்க் கல்லூரியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பிரிகேடியர் எஸ்பீ விக்ரமசேகர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ சிரேஷ்ட பணிநிலை அதிகாரிகள் அந்த மாணவ அதிகாரிகளுடன் விஜயத்தில் பங்குபற்றினர்.
இராணுவத் தலைமையகத்திற்கு வருகை தந்த குழுவை பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் டிகேஎஸ்கே டொலகே யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் முறைப்படி வரவேற்றார். அதேநேரம், பிரதி இராணுவ பதவிநிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூஏஎஸ்எஸ் வனசிங்க ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ என்டியூ, சிரேஸ்ட அதிகாரிகள், மாணவர் அதிகாரிகள் மற்றும் உடன் வந்த அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இராணுவத்தின் பொதுப்பணி பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சீபி விக்கிரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் செயற்பாட்டு மண்டபத்தில் ‘ஒரு சமகால படையலகு தளபதியின் வகிபங்கு’ என்ற தலைப்பில் விரிவுரையை நிகழ்த்தினார்.
சிரேஷ்ட கட்டளைப் பாடநெறி - 08 குழு, நடவடிக்கை பணிப்பகத்தின் செயல்பாட்டு அறை மற்றும் ஊடக பணிப்பகம் ஆகியவற்றை பார்வையிட்டதுடன். ஒவ்வொரு இடத்திலும், ஒவ்வொரு பணிப்பகத்தின் வகிபங்கு மற்றும் பணிகள் குறித்து அவர்களுக்கு விளக்கப்பட்டது.
நிதிப் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் டபிள்யூபிஎஸ்எம் அபேசேகர ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, இராணுவத்தின் வழங்கல பணிப்பாளர நாயகம் மேஜர் ஜெனரல் ஜீஆர்ஆர்பீ ஜயவர்தன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, காலாட்படை பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேபீஎஸ்ஏ பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, இலங்கை இராணுவத்தின் செயலாளர் மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூடபிள்யூஎஸ்டபிள்யூ பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.