Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th January 2025 11:18:17 Hours

இராணுவப் போர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

புத்தல இராணுவப் போர் கல்லூரியின் 2024 ம் ஆண்டிற்கான மூன்றாவது மூன்று மாதங்களுக்கான பட்டமளிப்பு விழா 2025 ஜனவரி 11 அன்று இராணுவப் போர் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சிரேஷ்ட கட்டளை பாடநெறி எண். 12 இன் 36 மாணவ அதிகாரிகள், கனிஷ்ட கட்டளை பாடநெறி எண். 31 இன் 65 மாணவ அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட பணிநிலை பாடநெறி எண். 27 இன் 20 மாணவ அதிகாரிகள் என மொத்தம் 121 அதிகாரிகள் தங்கள் பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். போர் கல்லூரியின் தளபதி பிரிகேடியர் டீசீஎம்ஜீஎஸ்டீ குறே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

சிறந்த கல்வித் திறமையை வெளிப்படுத்திய மற்றும் ஒவ்வொரு பாடநெறியிலும் தகுதியின் அடிப்படையில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற மாணவ அதிகாரிகளுக்கு பிரதம விருந்தினரால் விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பட்டமளிப்பு விழாவின் போது, பங்களாதேஷ் இராணுவத்தின் கேப்டன் எம்.டி. தௌஹிதுல் இஸ்லாம் தௌஹித், கனிஷ்ட கட்டளை பாடநெறி எண். 31 இல் கலந்து கொண்டதுடன், இலங்கை இராணுவத்தில் உள்ள தனது சகாக்களுடன் தனது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்கும் கலாசார மற்றும் தார்மீக விழுமியங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு பதக்கம் வழங்கப்பட்டது.

நிகழ்வின் முடிவில், தளபதி 'பட்டமளிப்பு உரையை' நிகழ்த்தியதுடன் புதிதாக பட்டம் பெற்ற அதிகாரிகளுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, சேவையில் எதிர்கால சவால்களை ஏற்றுக்கொள்ள அவர்களை ஊக்குவித்தார். அவர்களின் தொழில்முறை வளர்ச்சியைத் தொடரவும், இராணுவ அதிகாரிகளாக அவர்களின் தரத்தை மேலும் உயர்த்தவும் அவர் அவர்களை ஊக்குவித்தார்.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.