Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

19th May 2023 19:49:02 Hours

இராணுவப் பயிற்சியாளர்களால் யாழ். கடற்கரை கரப்பந்து வீரர்களுக்கு பயிற்சி

யாழ். குடாநாட்டில் வடமராட்சி (கிழக்கு) பிரதேசத்தில் அமைந்துள்ள தாழையடி கடற்கரையில் 55 வது காலாட் படைப்பிரிவினால் இராணுவப் பயிற்சியுடன் கடற்கரை கரப்பந்து விளையாட்டை அறிமுகப்படுத்தி, மே 14 ஆம் திகதி முதற் தடவையாக ஒரு அற்புதமான கடற்கரை கரப்பந்து போட்டியை நடாத்தியது.

இத்திட்டமானது, உள்ளூர் பாடசாலைகள், விளையாட்டு அமைப்புக்களுக்கு விளையாட்டை அறிமுகப்படுத்தி, இராணுவ கடற்கரை கரப்பந்து பயிற்சியாளர்களால் நடாத்தப்பட்ட பயிற்சி அமர்வுகள் நான்கு தனித்தனியான குழுக்களாக அமைந்திருந்தது. யாழ். உள்ள இளம் விளையாட்டு வீரர்களை தேசிய மட்டப் போட்டிகளுக்கு வரவழைக்கும் நோக்கத்துடன் கழகப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கு திறமையான வீரர்களை அடையாளம் காணும் வகையில் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகள் நடாத்தப்பட்டன.

இப்போட்டியானது தாழையடி கடற்கரையில் நிறைவு பெற்றது. இதில் பங்கேற்ற 22 அணிகளில் அம்பனந்த அலியவளையில் இருந்து இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.

அம்பன் அணி, பிங்போங் விளையாட்டுக் கழக அணியுடன் மூன்று சுற்று தீவிர போட்டியின் பின்னர் வெற்றி பெற்றது. இலங்கை இராணுவத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள் கடற்கரை கரப்பந்து அணிகளுக்கிடையிலான இரண்டு போட்டிகளும் பார்வையாளர்களைக் கவர்ந்தன.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிபிஎஸ்என் போதொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன். 51, 52, 55, மற்றும் 56 வது காலாட் படைப்பிரிவுகளின் தளபதிகள் உட்பட வடக்கு கடற் படையின் பிரதித் தளபதி, யாழ். சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ் முன்னரங்கு பராமரிப்புப் பிரதேசத்தின் தளபதி, கிளிநொச்சி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மருதங்கேணி பிரதேச செயலாளர், வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர், லயன்ஸ் கழகம் யாப்பாஹுவ மாவட்ட ஆளுநர், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளான பலர் கலந்து கொண்டனர். இறுதி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நன்கொடையாளர்கள் ஆதரவை வழங்கினர்.