Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd June 2024 19:44:42 Hours

இராணுவப் படையினர் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில்

பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை இராணுவம் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், தாழ் நில பகுதிகளில் பெரும்/ திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், நாடு முழுவதும் நிலவும் பாதகமான காலநிலை காரணமாக ஆறுகளுக்கு அருகில் உள்ள பகுதிகள் உள்ளவர்களுக்கு அனர்த்த நிவாரணம் வழங்கவும் இராணுவப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஏற்படும் அனர்த்தங்கள் மற்றும் சேதங்களுக்கு பதிலளிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவப் படையினர் அவதானத்துடன் உள்ளனர். மேலும், தெஹியோவிட்ட (தல்துவ),இடம்கொட, கலவான, எலபாத, அயகம, நெலுவ, புளத்சிங்கள, அகலவத்தை, திஹகொட, பத்தேகம, எல்பிட்டிய, திவித்துர, தவலம, மாலிம்பட, அதுரலிய, மொரவக்க, அக்குரஸ்ஸ, சீதாவாக்க களனிமுல்ல திஹாகொட (நாரங்கொட) மற்றும் கம்புருப்பிட்டிய (கொடவா) ஆகிய பகுதிகளில் மீட்பு படகுகளுடன் மீட்பு குழுவினர் உள்ளனர்.

மேலும், 02 ஜூன் 2024 அன்று களனிமுல்ல பிரதேசத்தில் களனி ஆற்றங்கரையின் உடைப்பெடுத்த பகுதிகளை சீர்செய்தல் மூலம் பாரிய அனர்த்தத்தைத் தடுப்பதற்காக இராணுவப் படையினர் விரைவாக நடவடிக்கைமேற்கொண்டுள்ளனர்.

மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நடவடிக்கைக்காக யூனிகோன் மற்றும் டபிள்யூஎம்இசட் இராணுவ வாகனங்கள் களுத்துறை,மாத்தறை மற்றும் காலி பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, அக்குரஸ்ஸ, மாலிம்பட, நெலுவ மற்றும் சாலாவ பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு வழங்குவதற்காக இராணுவத்தினர் ஏற்கனவே பிரதேசவாசிகளின் உதவியுடன் சமையல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளை வழங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், வெள்ளம் சூழ்ந்ததன் காரணமாக, இலங்கை இராணுவத்தின் கவச வாகனம் மூலம் ஒன்று முதல் மூன்று வயது வரையிலான பிள்ளைகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக அத்துரலிய சுகாதார அலுவலகத்தில் இருந்து அக்குரஸ்ஸ சுகாதார அலுவலகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர்.

மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு வழங்குதல், மின்சாரம் மற்றும் தொடர்பாடல் சேவைகள் மீளமைக்கப்படுவதை மேற்கொள்ள இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.