02nd June 2024 21:01:06 Hours
பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை இராணுவம் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், தாழ் நில பகுதிகளில் பெரும்/ திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், நாடு முழுவதும் நிலவும் பாதகமான காலநிலை காரணமாக ஆறுகளுக்கு அருகில் உள்ள பகுதிகள் உள்ளவர்களுக்கு அனர்த்த நிவாரணம் வழங்கவும் இராணுவப் படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால், பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஏற்படும் அனர்த்தங்கள் மற்றும் சேதங்களுக்கு பதிலளிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவப் படையினர் அவதானத்துடன் உள்ளனர். மேலும், அயகம (கிரியெல்ல), கலுதுருஓயா (கிரியெல்ல), தெஹியோவிட்ட (தல்துவ), மொரவக்க, தவலம, திஹாகொட, நெலுவ, பத்தேகம மற்றும் திவித்துராவ ஆகிய பகுதிகளில் அனர்த்த மீட்பு, திருத்தம் மற்றும் நிவாரண சேவைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
மேலும், 02 ஜூன் 2024 அன்று களனிமுல்ல பிரதேசத்தில் களனி ஆற்றங்கரையின் உடைப்பெடுத்த பகுதிகளை சீர்செய்தல் மூலம் பாரிய அனர்த்தத்தைத் தடுப்பதற்காக இராணுவப் படையினர் விரைவாகப் பதிலளித்துள்ளனர்.
மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நடவடிக்கையாக யூனிகொன் மற்றும் டபிள்யூஎம்இசட் இராணுவ வாகனங்கள் அப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதேவேளை, அக்குரஸ்ஸ, மாலிம்பட, நெலுவ மற்றும் சாலாவ பிரதேசங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு வழங்குவதற்காக இராணுவத்தினர் ஏற்கனவே பிரதேசவாசிகளின் உதவியுடன் சமையல் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதுடன், குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகளை வழங்குவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு வழங்குதல், மின்சாரம் மற்றும் தொடர்பாடல் சேவைகள் மீளமைக்கப்படுவதை உறுதிசெய்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனர்த்த முகாமைத்துவ நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.