28th April 2023 19:04:22 Hours
வள்ளிபுனம் இடைக்காடு பிரதேசத்தில் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 68 வது காலாட் படைப்பிரிவின் 681 வது காலாட் பிரிகேடின் 6 வது கெமுனு ஹேவா படையினர், இடைக்காடு மாணவர்களின் வகுப்பறையில் நிலவும் நெரிசலைக் குறைக்க மேலதிக வகுப்பறையொன்றை நிர்மாணித்தனர்.
ஊழல் நடைமுறைகள் இல்லாத திட்டத்தை நிர்வகிக்கும் சிறந்த பணியாளர்கள் இராணுவம் என்று அவர் கருதியமையினால், இத்திட்டத்திற்கு சமூக சேவை ஆர்வலர், கலாநிதி (திருமதி) ஷிரந்தி விக்கிரமநாயக்க, கட்டுமானப் பணிகளுக்கு ஒரு மில்லியன் ரூபாய் நிதியுதவியை வழங்கியுள்ளார்.
உத்தியோகபூர்வ கையளிக்கும் வைபவமும் அதன் திறப்பு விழாவும் புதன்கிழமை (ஏப்ரல் 19) அன்று கிழக்குத் திருச்சபையின் விசுவாசிகளின் தலைவர் வண. ஸ்ரீ வர்கிஸ் மோர் மக்காரியோஸ், நன்கொடையாளர், கலாநிதி திருமதி ஷிரந்தி விக்கிரமநாயக்க, 681 வது காலாட் பிரிகேட் தளபதி ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது. 68 வது காலாட் படைப்பிரிவின் கேணல் பொதுப்பணி, 6 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி, ஆசிரியர்கள், பிள்ளைகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.