20th April 2023 20:32:13 Hours
வ/ரொஷான் மஹாநாம ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த 90 மாணவர்களுக்கும், வெஹரதென்ன மரதமடுவ ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கும் புதன்கிழமை (ஏப்ரல் 12) முன்னாள் உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர் திரு. ரொஷான் மஹாநாம மற்றும் அனுராதபுரம் எஸ்ஒஎஸ் சிறுவர் கிராமத்தின் பணிப்பாளர் திரு திவாகர ரத்னதுரை ஆகியோரின் அனுசரனையில் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன.
62 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்ஏஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி ஆவர்களின் வழிக்காட்டலின் பேரில் ஆரம்பிக்கப்பட்ட இந்த செயற்றிட்டம் இரு பாடசாலைகளினதும் மாணவர்களை வ/ ரொஷான் மஹாநாம ஆரம்பப் பாடசாலையில் ஒன்று கூட்டி வழங்கப்பட்டது.
623 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் பிடிஆர் புதகொட யுஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையில் படையினர் விநியோகத்திற்கான சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். நன்கொடையாளர்கள் மற்றும் அழைப்பாளர்கள் இந் விநியோகத்தில் இணைந்தனர்.
இந் நிகழ்வில் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.