17th May 2023 21:01:07 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் 66 வது காலாட் படைபிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஆர்கேஎன்சி ஜயவர்தன ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் கருத்திற்கமைய சாதாரணதர கா.பொ.த (சா/த) பரீட்சார்த்திகளுக்கான கருத்தரங்கு 2023 மே 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கிளிநொச்சி பூநகரி மகாவித்தியாலயத்தில் நடாத்தப்பட்டது.
கருத்தரங்கில் விரிவுரைகள் நிபுணர்கள் குழுவினால் வழங்கப்பட்டதுடன் 66வது காலாட் படைப்பிரிவு தளபதி, 661 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் கேஜிஎம்என் செனவிரத்ன யூஎஸ்பீ, 663 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் எச்டபிள்யூஎம்சி பெர்னாண்டோ ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பூநகரி மகாவித்தியாலயத்தின் அதிபர் திரு. எஸ்ஆர் பாலச்சந்திர பரந்தன் ஜெயபுரம் மகா வித்தியாலயத்தின் அதிபர் திருமதி சிவானந்தன் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இக்கருத்தரங்கில் பிரதேசத்தைச் சேர்ந்த 244க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டதுடன், பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் இலவச செயலட்டைகள், புத்தகங்கள், அச்சுப் பதிப்புகள் என்பன 66 வது காலாட் படைபிரிவின் அனைத்து வீரர்களின் ஒத்துழைப்பு